Saturday, June 8, 2013

இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோரி ன் எண்ணிக்கையில் தமிழ்நாடு 2ம் இடம்!


இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தி ல் தான் அதிகமானசெல்போன் வாடிக்கையாளர்கள ் உள்ளனர். உத்தர பிரதேசத்தில் 12.16 கோடி பேர் செல்போன்களை பயன்படுத்துகின் றனர். இதற்கு அடுத்தபடியாக 7 கோடியே 18 லட்சம் வாடிக்கையாளர்கள ுடன் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது என்று டிராய் அமைப்பு தெரிவித்துள்ளது . தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி உத்தரப் பிரதேசத்ம் தமிழகத்தைத்தொடர்ந்து மகாராஷ்டிரம், ஆந்திரம் மற்றும் பிகார் ஆகிய மாநிலங்களில் செல்போன் பயன்படுத்தும் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகம். இந்த 5 மாநிலங்களில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையானது, இந்தியாவில் உள்ள செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையில் 45சதவீதம் (36 கோடி இணைப்புகள்) உள்ளது என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ளது . செல்போன் பயன்படுத்துவதில ், சர்வதேச அளவில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.கடந்தபிப்ரவரி மாதத்துடன் சுமார் 86.166 கோடி செல்போன் இணைப்புகள் இருந்ததாகவும், இது ஜனவரி மாதம் வரை சுமார் 86.26 கோடியாக இருந்தது என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது . இதன்மூலம் கடந்த ஜனவரியை விட பிப்ரவரி மாதம் சுமார் 0.11 சதவீதம் செல்போன் இணைப்புகள் குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.செல் போன் பயன்படுத்துவதில ், கர்நாடகம் 6-ம் இடத்திலும், மத்தியப் பிரதேசம் 7-ம் இடத்திலும், குஜராத் மாநிலம் 8-ம் இடத்திலும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் மாநிலமும் உள்ளன.,

No comments: