Tuesday, June 18, 2013

2013 ஜூலை 1ம் தேதி முதல் ரோமிங் கட்டணம் குறைகிறது!


2013 டெல்லி: டிராய் அமைப்பின் புதிய கட்டண விகித நிர்ணயத்தைத் தொடர்ந்து வருகிற ஜூலை 1ம் தேதிமுதல் செல்போன் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான ரோமிங் கட்டணம் குறைகிறது. ரோமிங்கில் இருக்கும்போது வெளியில் செல்லும் அழைப்புகளுக்கு இனிமேல் நிமிடத்திற்கு ரூ. 1.40க்குப் பதில் ஒரு ரூபாய் வசூலிக்கப்படும். அதேசமயம், வெளியில் செல்லும் எஸ்டிடிஅழைப்புகளுக்கு தேசிய ரோமிங்கில் நிமிடத்திற்கு ரூ. 2.40க்குப் பதில் ரூ. 1.50 ஆக குறைக்கப்படும்.தேசியஅளவிலான ரோமிங்கின்போது இன்கமிங் அழைப்புகளுக்கானரோமிங் கட்டணம்நிமிடத்திற்கு ரூ. 1.75க்குப் பதில் 75 பைசாவாக குறைக்கப்படும்.அதேபோல வெளியில் செல்லும் உள்ளூர் எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம் ரூ.1 ஆக குறைக்கப்படும்.வெளியில் செல்லும் எஸ்டிடி எஸ்.எம்.எஸ்களுக்கான கட்டணம்ரூ. 1.50 ஆக குறைக்கப்படும்.

No comments: